சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - நிலக்கல், பம்பையில் கடும் நெரிசல்!
06:15 PM Nov 24, 2024 IST
|
Murugesan M
விடுமுறை தினமான இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
Advertisement
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், விடுமுறை நாளான இன்று பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வந்தனர். சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
Next Article