For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040 வரை படி பூஜை முன்பதிவு நிறைவு - தேவஸ்தானம் தகவல்!

11:08 AM Jan 17, 2025 IST | Sivasubramanian P
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040 வரை படி பூஜை முன்பதிவு நிறைவு   தேவஸ்தானம் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040-ஆம் ஆண்டு வரை படி பூஜைக்கான முன்பதிவு நிறைவடைந்தது.

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தின் முதல் "படி பூஜை" நடைபெற்றது

Advertisement

தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் நடைபெற்ற படி பூஜையில், 18 படிகளையும் சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

சபரிமலை பூஜைகளிலேயே அதிக கட்டணமுள்ள இந்த படி பூஜையின் முன்பதிவு வரும் 2040ம் ஆண்டு வரை நிறைவடைந்துள்ளது.

Advertisement

படி பூஜையில் பங்கேற்க 1 லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Advertisement