செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சபரிமலை சீசனை முன்னிட்டு கோட்டையத்திற்கு சிறப்பு ரயில் - சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

11:13 AM Nov 17, 2024 IST | Murugesan M

சபரிமலை சீசனை ஒட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு, 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி ஹைதராபாத்தின் கச்சிகுடாவில் இருந்து கோட்டயத்திற்கு இன்றும், நவம்பர் 24 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வண்டி எண் :07131 கச்சி குடாவில் இருந்து இன்று மதியம் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை மாலை 6:30 மணிக்கு கோட்டயத்தை சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் வண்டி எண்: 07132 கோட்டயத்தில் நாளை இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 1 மணிக்கு கச்சிகுடா சென்றடைகிறது.

Advertisement

வண்டி எண்: 07135 நவம்பர் 19, 26 ஆகிய நாட்களில், ஹைதராபாத்தில் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4:10 மணிக்கு கோட்டயத்தை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் வண்டி எண்: 07132 கச்சிகுடாவில் நவம்பர் 20, 27 ஆகிய நாட்களில் மாலை 6: 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 11 :45 மணிக்கு ஹைதராபாத் சென்றடைகிறது.

வண்டி எண்: 07137 ஹைதராபாத்தில் நவம்பர் 22 , 29 ஆகிய நாட்களில் மதியம் 12:05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6:45 மணிக்கு கோட்டயத்தை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் வண்டி எண் :07138 கோட்டயத்தில் நவம்பர் 23 , 30 ஆகிய நாட்களில் இரவு, 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12: 50 மணிக்கு ஹைதராபாத்தை சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
coimbatoreerodeFEATUREDHyderabad KottayamKeralaMAINSabarimala season.salemSalem Railway Divisionspecial trains to KottayamTirupur
Advertisement
Next Article