சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 5, 000 வழங்க வேண்டும் - இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!
09:51 AM Nov 21, 2024 IST
|
Murugesan M
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவி தொகையாக தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
திருவள்ளூரில் இந்து மக்கள் கட்சியின் புதிய அலுவலகத்தை அர்ஜூன் சம்பத் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருத்தணி கோயில் கும்பாபிஷேகத்தை தமிழக அரசு விரைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மெக்கா புனித யாத்திரைக்கு உதவி தொகை வழங்குவது போல் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Advertisement
Advertisement
Next Article