சபரிமலை பெருவழி பாதையில் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் - நேரடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு!
02:10 PM Dec 18, 2024 IST
|
Murugesan M
சபரிமலையில் பெருவழி பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் வழங்கப்படுகிறது.
Advertisement
பெருவழி பாதை வழியாக நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள், மற்ற பக்தர்களுடன் க்யூ கவுண்டரில் நிற்காமல் நேரடியாக சிறப்பு தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தித்தரப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்திருந்தது.
அதன்படி, முக்குழி வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் வழங்கப்படுகிறது. பக்தர்கள், முக்குழியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் இந்த பாஸை பெற்றுக் கொண்டு, பம்பை வந்ததும் வரிசையில் நிற்காமல், நேரடியாக சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
Advertisement
Advertisement