செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சபரிமலை மகரஜோதி தரிசனம்! : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

08:04 PM Jan 14, 2025 IST | Murugesan M

சபரிமலை பொன்னம்பலமேட்டில் காட்சியளித்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிகழாண்டு மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியது. இதையொட்டி மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் விமரிசையாக நடைபெற்றன.

பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி மாலையில் சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம் போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் பெரிய நடை பந்தல் வழியாக சன்னிதானத்தை அடைந்தது.

Advertisement

தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்தினர்.

இந்த நேரத்தில் கோயில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசித்தது. இதை பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி காட்சியளித்தது.

அப்போது சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். மகர ஜோதி தரிசனத்தில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

Advertisement
Tags :
MAINSabarimala Maharajyothi Darshan
Advertisement
Next Article