சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் பகுதியில் கல்குவாரி : விவசாயம் பாதிக்கப்படும் அவலநிலை!
04:52 PM Jan 27, 2025 IST | Murugesan M
சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரசர்களின் வருகையால் விவசாயம் பாதிக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்குட்பட்ட இருக்கந்துறை கிராமத்தில் தனியார் நிறுவனம் கல்குவாரி அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
இதனால் இருக்கந்துறை பகுதியில் உள்ள தென்னை, பனை மரங்கள் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement