செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சமூகத்தின் ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை கட்டமைக்க வேண்டியது நேரம் வந்துள்ளது: நீதிபதி

02:55 PM Jan 25, 2025 IST | Murugesan M

சமூகத்தில் உள்ள ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை வரையறுப்பது அவசியம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த ஆகாஷ் கெஷாரி என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு வாரணாசியில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஆகாஷ் கெஷாரிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.

Advertisement

இதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார்.  இதுதொடர்பான விசாரணை நீதிபதி நளின் குமார் ஸ்ரீவட்சவா முன்பு விசாரணைக்கு வந்தது. இருவரின் விருப்பப்படியே தாம்பத்திய வாழ்வு வாழ்ந்து வந்ததாகவும், தான் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளிக்கவில்லை எனவும் ஆகாஷ் கெஷாரி தெரிவித்தார்.

அப்போது, லிவ் இன் உறவு முறைக்கு சமூக அங்கீகாரம் இல்லை என்பது தெரிந்தும் இளைஞர்கள் அதில் ஈர்க்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, சமூகத்தின் ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை கட்டமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக கூறினார்.

Advertisement
Tags :
Allahabad High CourtJudgeMAINmorals of society
Advertisement
Next Article