செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

06:11 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கடந்த 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட பின் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை எனக்கூறி அவரது மனைவி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

காவல்துறை முறையாக தடயங்களை சேகரிக்க தவறியதால் ஜகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்த நிலையில், ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே செய்வது கூடுதல் ஆவணமாக அமையும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார்.

இதனிடையேபுதுக்கோட்டை மாவட்ட கனிவளத்துறை உதவி இயக்குனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். துளையானூரில் நடைபெற்ற கனிமவள கொள்ளைக்கு எதிராக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கனிவளத்துறை உதவி இயக்குனர் லலிதாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கனிமவளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
Tags :
Jagbar Ali murder caseMadurai branch of the High CourtMAINpermission to exhume the body of Jagbar AliPudukkottai
Advertisement