செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

12:43 PM Mar 13, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருவண்ணாமலை அருகே நான்கு வழிச்சாலை அமைத்த பிறகு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென தெரிவித்த சமூக ஆர்வலரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

செங்கம் முதல் போளூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதே சமயம் கடலாடி பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 4 வழிச் சாலை அமைத்த பிறகே பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலரான ஜெகன்நாதன் என்பவர் கலசபாக்கம் திமுக எம்எல்ஏ சரவணனிடம் மனு அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஜெகன்நாதனுக்கும், திமுக பிரமுகரான பச்சையப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

தொடர்ந்து இது குறித்து ஜெகன்நாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பச்சையப்பன், ஜெகன்நாதனை சரமாரியாக தாக்கியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Tags :
DMK executive attacked social activist!MAINசமூக ஆர்வலர் மீது தாக்குதல்திமுக
Advertisement