செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக ஆணை!

12:30 PM Mar 27, 2025 IST | Murugesan M

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஏப்ரல் 1ஆம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய தன் தாய் மரணமடைந்ததையடுத்து கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

5 ஆண்டுகளுக்குப் பின் இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த தமிழக அரசு, அரசாணைப்படி பெண் வாரிசுகளுக்கு மட்டுமே சத்துணவு பணியாளர்களுக்கான பணி வழங்க முடியும் எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரித்தது.

Advertisement

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்ரம் மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆண் வாரிசுகளுக்குச் சத்துணவு பணியாளர் பணி வழங்கத் தடை விதித்த அரசாணையை ரத்து செய்து ஆணையிட்டிருப்பதால், மனுதாரரின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அதே காரணத்தைக் கூறி நிராகரித்ததாகக் குற்றஞ்சாட்டி சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விக்ரம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, அரசு அதிகாரியின் நடத்தை என்பது நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாததைக் காட்டுவதாகக் கூறி, ஏப்ரல் 1 ஆம் தேதி ஜெயஸ்ரீ முரளிதரனை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
MAINSocial Welfare Secretary summoned to appear!சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Next Article