சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் திமுக அரசு - வேலூர் இப்ராகிம் விமர்சனம்!
சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறதா என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு தொழுகை செய்யச் செல்லவிருந்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிமை போலீசார் கைது செய்து ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் அடைத்தனர். 10 மணி நேரத்திற்கு பிறகு அவர் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் வேலூர் இப்ராகிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை மீது மாட்டிறைச்சி சாப்பிட எம்பி நவாஸ் கனிக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால், மும்மதத்தினரும் வழிபாடு செய்ய காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ராமநாதபுரம் எம்.பி நவாப் கனியை கைது செய்யக் கோரியும் மதுரை - உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.