செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சமூக வலைதளங்களில் சாதி பெயர்களை குறிப்பிட்டு வீடியோ பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை - நெல்லை எஸ்.பி.எச்சரிக்கை!

05:30 PM Dec 22, 2024 IST | Murugesan M

நெல்லையில் சாதிய பெயர் சொல்லி வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

கடந்த 2023 கொலை செய்யப்பட்ட கீழநத்தம் ராஜாமணி கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கடந்த 20ஆம் தேதி நெல்லை நீதிமன்றம் வாசலில் மாயாண்டி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சீவலப்பேரி அருகே பொட்டலைச் சேர்ந்த வள்ளிமுத்து என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் இரு சாதியினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக நேற்று கைது செய்யப்பட்டார்.

Advertisement

இந்த நிலையில், சாதிய பெயர் சொல்லி வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்ட காவல்துறையினர் அனைத்து விதமான சமூக வலைத்தளங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINMayandinellai SP Silambarasanvideos uploaded using caste namesnellai sp warningNellai district police
Advertisement
Next Article