செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சமூக வலைதளங்களில் வெளியான திருச்செந்தூர் கோயில் உற்சவர் சண்முகர், வள்ளி தெய்வானை வீடியோ - பக்தர்கள் அதிர்ச்சி!

11:26 AM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், உற்சவர் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

2 ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர் கோயிலில் உள்ள சிற்பங்கள், சிலைகள் , பஞ்சலிங்க சுவாமிகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கோயிலில் மூலவர் அருகே உள்ள உற்சவர் சண்முகர், வள்ளி தெய்வானையுடன் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் கோயிலின் புனிதத்தன்மை அழிந்து வருவதாக அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Advertisement
Tags :
MAINTiruchendur Subramanya Swamy TempleTiruchendur Subramanya Swamy Temple videoUtsavar ShanmugarValli Deivanai
Advertisement