சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இலங்கை பாகிஸ்தானில் அதிகம்! : நிர்மலா சீதாராமன்
06:05 PM Dec 17, 2024 IST | Murugesan M
அண்டை நாடுகளை ஒப்பிடுகையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்தியாவில் குறைவாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இலங்கையில் ஆயிரத்து 211 ரூபாயாகவும், பாகிஸ்தானில் ஆயிரத்து 95 ரூபாயாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
Advertisement
அதே சமயம், இந்தியாவில் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 503 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு 803 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement