சரணடைந்த நக்சலைட்டுகள் - மகாராஷ்டிரா அரசுக்கு பிரதமர் பாராட்டு!
05:40 PM Jan 02, 2025 IST
|
Murugesan M
கட்சிரோலியில் 11 நக்சலைட்டுகள் சரணடைந்த நிலையில், மகாராஷ்டிர அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மகாராஷ்டிர அரசின் முயற்சிகளுக்கு பாராட்டுகள் என்றும், இது அங்குள்ள மக்களின் வாழ்க்கையை நிச்சயமாக எளிதாக்கும் எனவும் கூறியுள்ளார்.
கட்சிரோலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
Next Article