சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரமாக நடமாடியது எப்படி? இபிஎஸ் கேள்வி!
05:30 PM Dec 27, 2024 IST
|
Murugesan M
சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரமாக நடமாடியது எப்படி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரமாக உலாவியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை உண்மையை மறைக்க முயற்சிப்பதாகவும், காவல்துறையின் விசாரணை தகவல் முன்னுக்கு பின் முரணாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
Advertisement
உயர்கல்வித்துறை அமைச்சரும், காவல் ஆணையரும் முரண்பட்ட கருத்துகளை தெரிப்பதாகவும், அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் 30ம் தேதி நடைபெறும் எனறும் இபிஎஸ் தெரிவித்தார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Advertisement
Next Article