சர்ச்சைக்குரிய 3 விநாடி காட்சிகளுடன் வெளியானது நயன்தாராவின் ஆவணப்படம்!
நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை, காதல் மற்றும் திருமணம் ஆகியவற்றை தழுவி உருவான 'Nayanthara beyond the fairy tale' ஆவணப்படத்தில், சர்ச்சைக்குரிய 3 விநாடி காட்சி இடம்பெற்றுள்ளது.
Advertisement
நயன்தாராவின் திரைப்பயணத்தையும் காதல் திருமணத்தையும் மையப்படுத்தி இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. நெட்பிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள இப்படம், சென்னை வடபழனியில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.
ஏற்கெனவே ட்ரெய்லரில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல் காட்சிகளை பயன்படுத்த அதன் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி மறுத்தது விவாதப் பொருளானது. வெறும் 3 வினாடி காட்சிகளுக்கு தனுஷ் தரப்பில் இருந்து 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டதாக நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஒரு மணி நேரம் 22 நிமிடம் ஓடும் ஆவணப்படமானது, நானும் ரவுடிதான் படக் காட்சிகளையும் கொண்டு வெளியாகிறது. இதனால், தனுஷ் தரப்பில் இருந்து அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.