சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் - சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!
ர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலகின் மிக உயர்ந்த சிலையான படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், கெவாடியா மைதானத்தில் நடைபெற்ற காவல் துறை அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இதையடுத்து தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை பிரதமர் மோடி வாசித்தார். அப்போது தேசத்தின் ஒற்றுமையை நிலைநாட்ட படேலின் பிறந்த நாளில் உறுதியேற்போம் என பிரதமர் மோடி சூளுரைத்தார்.
பின்னர், காவல் துறையினரின் கண்கவர் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையினரின் சாகசம் நடைபெற்றது. இருசக்கர வாகனத்தில் தேசிய கொடியையும் என்எஸ்ஜி கொடியையும் பாதுகாப்பு படையினர் கொண்டு சென்றதை அங்கு திரண்டிருந்தவர்கள் உற்சாகம் பொங்க கண்டுகளித்தனர்.
தேசத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், இருசக்கர வாகனத்தில் சர்வமதத்தை சார்ந்த காவல் துறையினர் அணிவகுத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து படேல் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலை விளையாட்டுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
விழா நிறைவாக தேச பக்தி பாடலுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் உற்சாகமாக நடனமாடினர்.