செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சர்வதேச சட்டத்தை பின்பற்றினால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

07:00 PM Nov 21, 2024 IST | Murugesan M

சர்வதேச சட்டத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

ஆசியான் அமைப்பின் 11-வது பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், எல்லை தகராறு போன்ற உலகளாவிய சவால்களை தீர்ப்பதில் அமைதியான பேச்சுவார்த்தையையே இந்தியா விரும்புகிறது என தெரிவித்தார்.

Advertisement

மேலும் சர்வதேச சட்டத்தை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டுமன்றும் அவர், வலியுறுத்தினார். இதையடுத்து நியூசிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜூடித் காலின்ஸை சந்தித்த அவர், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisement
Tags :
New Zealand Defence Minister Judith CollinsFEATUREDMAINdefence minister rajnath singhadhering to international lawglobal issues can be resolved11th ASEAN Defence Ministers' Meeting
Advertisement
Next Article