சர்வதேச தரவரிசை : 31-வது இடத்தில் சென்னை ஐஐடி!
சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் சென்னை ஐஐடி 31வது இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற சர்வதேச தரவரிசை நிறுவனம் உலகளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு வாரியான தரத்தை மதிப்பிட்டு தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான தரவரிசையில், பொறியியலில், கனிமம் மற்றும் சுரங்கம் பாடத்தில் தன்பாத்தில் உள்ள ஐஎஸ்எம் எனப்படும் இந்திய சுரங்கப் பள்ளி 20வது இடத்தையும், ஐஐடி மும்பை மற்றும் ஐஐடி கரக்பூர் முறையே 28வது மற்றும் 45வது இடங்களை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக மேலாண்மை படிப்பில் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐஎம் பெங்களூரு முறையே 27 மற்றும் 40வது இடத்தில் உள்ளன என்றும், கடந்த ஆண்டை காட்டிலும் இவ்விரு நிறுவனங்களின் தரவரிசை குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோலியம் பொறியியல் பாடப்பிரிவில் சென்னை ஐஐடி 31ம் இடம் பிடித்துள்ளதாக தரவரிசையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.