செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா குழு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - நாசா விளக்கம்!

10:18 AM Dec 26, 2024 IST | Murugesan M

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த சந்தேகங்களுக்கு நாசா விளக்கமளித்துள்ளது.

Advertisement

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்சி வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் வாயிலாக சர்வதேச விண்வெளி நிலையம் சென்றனர். 9 நாட்களில் அவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்தாண்டுதான் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விண்வெளியில் இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டது. பல மாதங்களாக விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடியது எப்படி என இணையதளவாசிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.

Advertisement

இதற்கு விளக்கமளித்துள்ள நாசா, கடந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வாயிலாக, கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

வான்கோழி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அறிவியல் பணிகளுக்கான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டதாக நாசா கூறியுள்ளது.

Advertisement
Tags :
Christmas celebration International Space Station.FEATUREDInternational Space StationMAINNASAsunita williams
Advertisement
Next Article