செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்க புறப்பட்டது விண்கலம்!

06:58 AM Mar 15, 2025 IST | Ramamoorthy S

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது.

Advertisement

ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை திரும்ப அழைத்து வருவதற்காக நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது பணியை தொடங்கியுள்ளது.

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்ட 4 பேர அழைத்து வர அமெரிக்க நேரப்படி இரவு 7.03 மணிக்கு டிராகன் செயற்கைக்கோளுடன் பால்கன் 9 ரக ராக்கெட் புறப்பட்டு சென்றது. இதில் 4 பேர் கொண்ட குழுவினர் செல்கின்றனர்.

Advertisement

இந்த ராக்கெட் இன்றிரவு 11.30 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-சுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது,

வருகிற 19-ந்தேதி வில்மோர் மற்றும் வில்லயம்ஸ் இருவரும் அந்த செயற்கைக்கோளில்  பூமிக்கு திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

Advertisement
Tags :
Butch WilmoreFEATUREDInternational Space StationMAINNASASpaceX launch missionsunita williams
Advertisement
Next Article