செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சவால்கள் நிறைந்த IRONMAN 70.3 போட்டியில் சாதனை - தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

03:41 PM Oct 28, 2024 IST | Murugesan M

சவால்கள் நிறைந்த IRONMAN 70.3 போட்டியில் பங்கேற்று, அதை நிறைவு செய்த முதல் பொதுமக்கள் பிரதிநிதி என்ற பெருமையை பெற்றுள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவாவின் மிராமர் கடற்கரையில் கடந்த 26-ம் தேதி IRONMAN 70.3 போட்டிகள் நடைபெற்றன. சவால்கள் நிறைந்த இப்போட்டி 1.9 கி.மீ நீச்சல், 90 கி.மீ சைக்கிள் பந்தயம் மற்றும் 21.1 கி.மீ ஓட்டம் என 3 தொடர் சுற்றுகளாக நடைபெறும்.

இப்போட்டியில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா பங்கேற்று போட்டியை நிறைவு செய்த நிலையில், இப்போட்டியை நிறைவு செய்த முதல் பொதுமக்கள் பிரதிநிதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். போட்டியில் பங்கேற்ற புகைப்படங்களையும் தனது அனுபவத்தையும் தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில், அந்த பதிவை குறிப்பிட்டு பதில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, இது ஒரு பாராட்டத்தக்க சாதனை என்றும், பல இளைஞர்களை உங்கள் சாதனை ஊக்குவிக்கும் எனவும் பாராட்டியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவின் சாதனையை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Tags :
BJP MP Tejashwi SuryaFEATUREDGoaMAINMiramar BeachPrime Minister Modi greetingsRONMAN 70.3
Advertisement
Next Article