செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் - இதுதான் ஜனநாயக ஆட்சியா? : ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி!

06:20 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திராவிட மாடல் என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த போலி திராவிட மாடல் திமுக அரசிற்கு எதிராக, அவர்கள் செய்யும் ஊழலையும், முறைகேடுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்துவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் இந்த அராஜகப் போக்கை வன்மையாக எல். முருகன் கண்டித்துள்ளார்.

Advertisement

இந்த திமுக ஆட்சியில், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் ஊழலை, தொடர்ந்து தனது சவுக்கு மீடியா மூலமாக வெளிக்கொணர்ந்து வருகின்ற  சவுக்கு சங்கர் இல்லத்தில், அவர் இல்லாத சமயம் பார்த்து அத்துமீறி நுழைந்திருக்கும் கும்பல் மீது, காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அப்பட்டமான பழிவாங்கல் செயலாகும் என எல். முருகன்  குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அறிக்கை விடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா? இதுதான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயக ஆட்சியா? இன்று சவுக்கு சங்கர் மீதும், அவரது தாயார் மீதும் வன்முறையை ஏவி விட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINMK Stalinbjp l muruganAttack on Savukku Shankar's house - Is this a democratic government?: Union Minister L. Murugan questions Chief Minister Stalin!
Advertisement