செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

06:45 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்  தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக,  சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்தவர், ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINDMKtn bjpsavukku shankarannamalai condemnsAnnamalai condemns the violence against Savukku Shankar
Advertisement