சவுதி அரேபியாவில் சாலை விபத்து - 9 இந்திய தொழிலாளர்கள் பலி!
01:50 PM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
Advertisement
சவுதி அரேபியாவின் தெற்கு துறைமுக நகரமான ஜிசானில் இருந்து, 26 தொழிலாளர்கள் பணி நிமித்தமாக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பேருந்து, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. 15 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 9 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள இந்திய துணை தூதரகம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், அவசர உதவி எண்ணையும் வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement