செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சாட்டையடி போராட்டம் ஏன்? - அண்ணாமலை விளக்கம்!

05:55 PM Dec 28, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டில் இருக்கிறாரா அல்லது தனித்தீவில் வசிக்கிறாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், FIR பற்றி தாம்  தெரிவித்த கருத்தையே உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தெரிவித்துள்ளதாக கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர்தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டு போய்விட்டதால் சாட்டையடி போராட்டத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

Advertisement

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் அண்ணனாக சாட்டையடி போராட்டத்தில் இறங்கியதாகவும் அவர் கூறினார். திருமாவளவன் சிறந்த அரசியல் தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை  என்றும், ஆனால் அவ்ர  தமிழ்நாட்டில் இருக்கிறாரா அல்லது தனித்தீவில் வசிக்கிறாரா எனறும் அவர் கேள்வி எழுப்பினார்.

கூட்டணி கட்சியாக இருப்பதால் திருமாவளவன் மௌனமாக உள்ளதாகவும்  அண்ணாமலை கூறினார்.

Advertisement
Tags :
FEATUREDMAINannamalaiDMKAnna Universitytamilnadu governmentchennai policethirmavalavanAnna University campusstudent sexual assault
Advertisement