செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சாதனை படைத்த சபரிமலை – அடேயப்பா…! இத்தனை இலட்சம் பக்தர்களா?

05:31 PM Dec 24, 2023 IST | Murugesan M

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி நவம்பர் 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.

Advertisement

தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலிலிருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் சபரிமலை சென்றடைந்து 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.

அன்றைய தினத்துடன் கோவில் பூஜைகள் நிறைவடைகிறது. நிறைவாக, அன்றை தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும்.

Advertisement

டிசம்பர் 31-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். அன்றையதினம் மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும் .

தொடர்ந்து ஜனவரி 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்பத்தினர் தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி , ஐயப்பன் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்கின்றனர்.

அந்த வகையில், டிசம்பர் 26-ம் தேதி 64,000 பேரும், 27-ம் தேதி 70,000 பேரும், 2024 -ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் 80,000 பக்தர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் இதுவரை 25.69 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
MAINsabarimala templeSabarimalai
Advertisement
Next Article