சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சர்ச்சை கருத்து - ராகுல் காந்திக்கு உ.பி.நீதிமன்றம் நோட்டீஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தலின்போது நாடு தழுவிய அளவில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலும் பேசினார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையானது. இந்நிலையில், நாட்டு மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளதாகவும், எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பங்கஜ் பதக் என்பவர், உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக ஜனவரி 7ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.