செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்!

03:47 PM Nov 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

மதுரை மாவட்டம் பரவை அருகே சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பரவை அருகேயுள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இங்கு வசிக்கும் மக்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு காரணங்களை கூறி சாதிசான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், 6வது நாளாக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டுள்ள நிலையில், அங்கேயே சமைத்து சாப்பிட்டு அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து சத்தியமூர்த்தி நகர் பகுதியை முதியோர் மற்றும் குழந்தைகள் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் யாசகம் பெறும் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

 

Advertisement
Tags :
MAINMore than a thousand public protest demanding caste certificate!
Advertisement