செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே வெள்ள பாதிப்புக்கு காரணம் - அண்ணாமலை குற்றச்சாட்டு!

12:59 PM Dec 03, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் ஹனுமந்தை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூர்வாரும் பணிகளை திமுக அரசு மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் அதிக பாதிப்பு ’ஏற்பட்டுள்ளதாகவும், சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பில் ஏற்பட்ட குளறுபடியே பாதிப்பிற்கு காரணம் என்றும் கூறினார்.

Advertisement

38 கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், சாத்தனூர் அணையை தூர்வாராததால் அணையில் கொள்ளளவு குறைந்துள்ளதாகவும்  அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

டெல்லியில் நாளை மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்த அவர்,மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு வர வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

மத்திய அரசு விரைவில் இழப்பீட்டு தொகை வழங்கும் என்றும், காகித அளவிலேயே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Advertisement
Tags :
chennai metrological centerFEATUREDfengalheavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningsadanur floodtamandu rainvilupuram floodweather update
Advertisement