சாத்தனூர் அணை திறப்பால் 20 பேர் பலி - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தித்தில் சாத்தனூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாகவே 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Advertisement
கடலூரில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கண்டகாடு கிராமத்தில் பாமக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நள்ளிரவில் சாத்தனூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடலூர் மாவட்டத்தில் நான்காயிரம் ஏக்கர் விளை நிலங்கள் சேதமடைந்ததாகவும் கூறினார்.
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது தவறு என்றும், அதே நேரத்தில் அந்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் தவறு என்றும் அன்புமணி கூறினார்.