சாத் பூஜை கோலாகலம் - கங்கையில் நீராடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
06:50 PM Nov 07, 2024 IST | Murugesan M
சாத் பூஜையின் 3-ஆம் திருநாளையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை படித்துறையில் ஏராளமானோர் குவிந்தனர்.
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் சாத் பூஜை வடமாநிலங்களில் கோலாகலமாக நடைபெறுகிறது. சாத் பூஜையின் 3-ஆம் திருநாளையொட்டி, வாரணாசியில் கங்கை படித்துறையில் பக்தர்கள் சந்தியா பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கங்கையில் நீராடி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Advertisement
இதேபோல பாட்னா படித்துறையிலும் சாத் பூஜை களைகட்டியது. விழா ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோர் கப்பலில் சென்று ஆய்வு செய்தனர்.
Advertisement
Advertisement