சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மிளகாய் சண்டி யாகம்!
07:10 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.
Advertisement
தை அமாவாசையை ஒட்டி நடைபெற்ற இந்த யாகத்தில் மூட்டை, மூட்டையாக மிளகாய் மற்றும் 108 வகையிலான மூலிகைகள் குண்டத்தில் இடப்பட்டன. தொடர்ந்து பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனையும் நடைபெற்றன.
பின்னர் அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement