சாம்பியன்ஸ் டிராபி போட்டியை காண செல்கிறீர்களா? கவனம் - பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை!
09:01 AM Feb 25, 2025 IST
|
Ramamoorthy S
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை காண வரும் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டுவதாக அந்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் அமீரகத்துக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியைக் காண வெளிநாட்டு ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.
அவர்களை பணத்துக்காக பயங்கரவாத அமைப்பு கடத்த திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
Advertisement