சாலையை கடக்க முயன்றவர் மீது ஆட்டோ மோதும் அதிர்ச்சியூட்டும் காட்சி!
04:13 PM Feb 15, 2025 IST
|
Murugesan M
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையை கடக்க முயன்றவர் மீது ஆட்டோ மோதிய அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது.
Advertisement
கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தோமா நகர் சந்திப்பு அருகே பிரதீப் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த ஆட்டோ, பிரதீப் மீது மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த தேவர் சோலையை சேர்ந்த பிரதீப்பை, அருகில் இருந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் அப்னாஸ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement