சாலையோர கடைகளை அகற்றுமாறு மிரட்டும் திமுக நிர்வாகிகள் - வெளியானது வீடியோ!
10:27 AM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
வேலூரில், சாலையோர கடைகளை அகற்றுமாறு திமுக நிர்வாகிகள் கடைக்காரர்களை மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
Advertisement
கடந்த 25-ம் தேதி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுகவின் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது, திமுக நிர்வாகிகள் சிலர், சாலையோர கடைகளை வேறு இடத்தில் போடும்படி கூறியுள்ளனர். ஆனால் முன்னறிவிப்பு இன்றி தங்களால் கடையை மாற்ற முடியாது என கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் "நாளையில் இருந்து நீ கடை போட மாட்ட" என மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement