சித்தாபுதூர் ஐயப்பன் பொற்கோவிலில் அண்ணாமலை தரிசனம்!
இரண்டாம் சபரிமலை என்றழைக்கப்படும் சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் பொற்கோவிலில் 56 ஆம் ஆண்டு விழா ஐந்தாம் நாள் திருவிழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொணடு தரிசனம் செய்தார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதியில், விழாவில் கலந்து கொண்டதை பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
மேற்கு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், முதலில் சித்தாபுதூர் ஐயப்பனை தரிசனம் செய்த பின்னரே சபரிமலைக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு என்றும், தினமும் சுமார் 500 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும் புண்ணியத் தலம் என்றும் கூறியுள்ளார்.
ஐயப்பா சேவா சங்கத்தின் 70 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, சுவாமி ஐயப்பன் பக்தர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும், நமது நாடும், தமிழகமும், நமது மக்கள் அனைவரும், நலமுடன், வளமுடன் இருக்க வேண்டுமென்று, ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்தபடி, சின்முத்திரை திகழ, அழகுறக் காட்சி தரும் ஐயப்ப சுவாமியிடம் பிரார்த்தித்துக் கொண்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.