செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சிபிஐ விசாரணை கோரி வேங்கை வயலில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்!

01:05 PM Jan 28, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி அப்பகுதி மக்கள், 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், கடந்த 20ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகள் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேங்கைவயலில் பட்டியலினத்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 4வது நாளாக கையில் கருப்புக் கொடியை ஏந்தி, வாயில் கருப்பு துணிக்கட்டி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில், ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, சுதர்சன் , முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் காவலர் முரளி ராஜா கடந்த 20ஆம் தேதி முதல் பணிக்கு வரவில்லை என்றும், விடுப்பு கேட்டு விண்ணபிக்கவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINpudukottai vengaivayal casepudukottai vengaivayal case newspudukottai vengaivayal dalit water tank issuevengaivasalVENGAIVAYAL 4TH DAY PROTESTvengaivayal case | cbcid policeVengaivayal case.vengaivayal issuevengaivayal problemVengaivayal.vengavayal casevengavayal case newsvengavayal case update
Advertisement