சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!
01:24 PM Mar 18, 2025 IST
|
Murugesan M
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
Advertisement
சிரியாவின் அதிபரான பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.
2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில், அதிபர் பஷார் அல்-ஆசாத் நாட்டை விட்டுத் தப்பியோடினார். இந்நிலையில், சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், ஆயுதக் கிடங்குகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
Advertisement
அந்த வகையில், சிரியாவின் தெற்கே தேரா மாகாணத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
Advertisement