சிறப்பாக செயல்படும் தமிழக ஆளுநரை ஏன் மாற்ற வேண்டும்?- அண்ணாமலை கேள்வி!
2026-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார்.
Advertisement
பாஜக நிர்வாகியின் இல்லத்திருமண நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திமுக ஆட்சி மீதான விமர்சனங்களை மறைக்கவே மத்திய அரசு மீது வீண் பழி சுமத்துவதாக தெரிவித்தார்.
10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும், இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள்ளதாகவும் அவர் கூறினார். ஆட்சியின் அவலங்களை மறைக்க அனைத்தையும் அரசியலாக்குவதாகவும் அண்ணாமலை சாடினார்.
சாட்டை மீது சந்தேகம் இருந்தால் திமுகவினர் தமது வீட்டுக்கு வந்து ரெண்டு அடி அடித்து பார்த்தால் அது உண்மையா இல்லையா என்பது தெரியவரும் என்றும் கூறினார்.
தமிழக ஆளுநர் சிறப்பாக செயல்படுவதாகவும், அவரை ஏன் மாற்ற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். கவர்னரை மாற்றக்கூடாது என தமிழக பாஜக வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம் எனறும், அவர் கூறினார்.ஒரு தொகுதியில் 5 ஆண்டுகளில் மக்கள் 4 முறை ஓட்டு போட்டால் ஜனநாயகத்திற்கு மீது அவர்களுக்கு மரியாதை வருமா? என்றும், ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை நிற்க வைத்து ஓட்டு கேட்பீர்களா என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.