சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்ட தொலை தூர பேருந்துகள் - பயணிகள் அவதி!
சிவகங்கை மாவட்டத்தில், தொலை தூர பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக மாற்றி இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
Advertisement
சிவகங்கையில் இருந்து, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, முறையான இடைவெளியில் தொலை தூர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை யொட்டி, பெரும்பாலான பேருந்துகள் சென்னைக்கு சிறப்பு பேருந்துகளாக மாற்றி இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், சொந்த ஊர்களுக்கு திரும்ப முயன்ற பயணிகள், போதிய பேருந்து வசதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், நகர பேருந்துகளை, சிறப்பு பேருந்துகள் என மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாரிகளின் தவறான நடவடிக்கை மற்றும் முறையான திட்டமிடல் இன்மை ஆகியவற்றின் காரணமாக, உரிய நேரத்தில் வீடு திரும்ப முடியவில்லை என பாதிக்கப்பட்ட பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.