சிறுகனூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்!
சிறுகனூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் சிரமத்திற்கு ஆளான கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.