சிறைக்கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்கள் - வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு!
சிறைக் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைக் கைதிகளை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்களின் வசதிக்காக புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கைதிகளை சந்திக்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிறையில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வழக்கறிஞர்கள் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்குமாறும் அறிக்கை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது
இதனையடுத்து சிறையில் ஆய்வு செய்து பரந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.