சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வாக்குறுதி என்ன ஆனது? - முதல்வருக்கு எல்.முருகன் கேள்வி!
07:30 AM Apr 09, 2025 IST
|
Ramamoorthy S
சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் வழங்குவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
ஈரோடு பன்னாரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதுபிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், விழா ஏற்பாடுகள் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்துள்ளதாகவும் கூறினார்.
சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்க இதுவரை திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். கச்சா எண்ணெய் விலை உயர்வை பொறுத்தே சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் எல். முருகன் கூறினார்.
Advertisement
Advertisement