சிலி அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
07:24 AM Apr 02, 2025 IST
|
Ramamoorthy S
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சிலி அதிபர் கேப்ரியல் போரிக், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Advertisement
சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்துள்ளார். புது டெல்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவுத்துறை இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா வரவேற்றார். இந்நிலையில் தில்லியிலுள்ள காந்தி நினைவிடத்தில் கேப்ரியல் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பின் பேரில், ஹைதராபாத் இல்லத்தில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Advertisement
Advertisement