சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவர்களில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை! - உணவு பாதுகாப்புத்துறை
10:28 AM Nov 19, 2024 IST
|
Murugesan M
சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவு பார்சல் செய்தாலோ அல்லது கடையில் வைத்த விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
பிரியாணி உணவை சில்வர் கவரில் பார்சல் செய்து விற்பனை செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், சில்வர் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு பார்சல் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், கடையின் உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி கடை உரிமைத்தை ரத்து செய்து கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Next Article