சிவகங்கை அருகே குப்பி பொங்கல் விழா கோலாகலம்!
02:00 PM Jan 17, 2025 IST
|
Sivasubramanian P
சிவகங்கை அருகே விவசாயம் செழிக்க வேண்டி சிறுமிகள் பங்கேற்ற பாரம்பரிய குப்பி பொங்கல் விழா நடைபெற்றது. சிறுமிகள், மார்கழி முழுவதும் வீட்டு வாசல்களில் கோலமிட்டு சாணத்தில் வைக்கப்படும் பூசணிப் பூ மற்றும் சாணம் ஆகியவற்றை ஒரு சொம்பில் சேகரித்தனர்.
Advertisement
அதில், ஆவாரம் பூ வைத்தும், அலங்கரித்தும், வீடுகளில் இருந்து குப்பியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர், உச்சி காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் முடிந்ததும் கும்மி கொட்டியும், குப்பியை ஊர்வலமாக எடுத்துச் சென்றும், அருகேயுள்ள கோயில் குளத்தில் கரைத்தனர்.
தொடர்ந்து, காலி சொம்பில் புனித நீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
Next Article