சிவகங்கை அருகே தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் - போக்குவரத்து துண்டிப்பு!
06:45 PM Dec 15, 2024 IST
|
Murugesan M
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆழவிலாம்பட்டி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 10 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மணிமுத்தாறில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மதகுபட்டி அடுத்த ஏரியூரில் அமைந்துள்ள பெரிய கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
இதன் காரணமாக பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், கொட்டகுடி, கருங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் ஆழவிலாம்பட்டி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
Advertisement
இதனால் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஒருசிலர் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் தரைப்பாலத்தில், ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனர்.
Advertisement